இங்கு விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு இதுதான் நிலைமை - அதிர்ச்சி தகவல்
விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு நடக்கும் கொடுமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன். நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கொடூரமான தண்டனை கொடுப்பது.
ஒருவர் தப்பு செய்தால், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தண்டனை என கடுமையாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடும் தண்டனை
இதற்கிடையில் கொரோனாவிற்கு பிறகு வடகொரியாவில் விவகாரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விவாகரத்து செய்யும் தம்பதிகள் உடனடியாக தடுப்பு காவலில் எடுத்து சென்று கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள்.
ராணுவத்தில் லேபராக சேர்க்கப்பட்டு மிகக் கடுமையான வேலைகளை வாங்கி அடிமைகளை போல நடத்தி மனித உரிமை மீறலில் வடகொரியா ஈடுபடுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.