வெறும் ரூ.85க்கு அழகான வீடுகள் விற்பனை.. எங்கு தெரியுமா? இறுதியில் தெரியவந்த உண்மை!

Italy Viral Photos World
By Swetha Dec 20, 2024 02:30 PM GMT
Report

வெறும் ரூ. 85 முதல் வீடுகள் விற்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அழகான வீடுகள் 

இத்தாலியில் உள்ள சிறு நகர நிர்வாகங்கள், பெருநகரங்களுக்கு இடம்பெயர்வதால் மக்களும் குடிப்பெயர்ந்து வருகின்றனர். இதனால் சிறுநகரங்கள் பொலிவை இழந்து வருவதை பார்க்க முடிகிறது.

வெறும் ரூ.85க்கு அழகான வீடுகள் விற்பனை.. எங்கு தெரியுமா? இறுதியில் தெரியவந்த உண்மை! | House With Beautifull View Is Sold For Rs 80 Only

இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வாழ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நகர நிர்வாகங்கள் தீவிரப்படுத்தி உள்ளன. அதன் ஒரு பகுதியாகதான், சிசிலியில் உள்ள முசோமெலி, காம்பானியாவில் உள்ள சுங்கோலிசம்புகா உள்ளிட்ட சிறுநகரங்கள்,

சுமார் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கள் பழமையான வீடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஏலத்தில் பங்கேற்க முதலில் இந்திய மதிப்பில் சுமார் நான்கரை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

ஒருவேளை இந்த ஏலத்தில் தோற்றுவிட்டால் கொடுத்த தொகை அப்படியே திருப்பி வந்துவிடும். ஒரு இடத்தை அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு அந்த இடம் விற்பனை செய்யப்படும். டெபாசிட் தொகையில் விற்பனைத் தொகை கழித்துக்கொள்ளப்படும்.

சென்னையில் வாழும் மன்னர் வம்சம்.. முக்கிய பகுதியில் பெரிய அரண்மனை - எங்கு தெரியுமா?

சென்னையில் வாழும் மன்னர் வம்சம்.. முக்கிய பகுதியில் பெரிய அரண்மனை - எங்கு தெரியுமா?

ரூ.85க்கு

வரி விலக்கும் தரப்படும். இந்த தள்ளுபடி வீடு விற்பனையில் ஒரு சில முக்கிய விதிகளும் அடங்கும். அதாவது, வீட்டை வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டமைப்பு செய்து புதிதாக மாற்றியமைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

வெறும் ரூ.85க்கு அழகான வீடுகள் விற்பனை.. எங்கு தெரியுமா? இறுதியில் தெரியவந்த உண்மை! | House With Beautifull View Is Sold For Rs 80 Only

பணமும் திருப்பி வராது. அப்படி வீட்டை சுத்தம் செய்வதும் எளிதான காரியம் இல்லை என்கிறார்கள் வீட்டை வாங்கியவர்கள். இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மெரிடித் டபோன், இத்தாலியின் சம்புகாவில் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார்.

மின்சாரம், தண்ணீர் வசதி உள்ளிட்ட எதுவும் இல்லாத, சுமார் 2 அடி உயரத்துக்கு புறா கழிவுகள் நிறைந்த வீட்டை புதுப்பிக்க சில பல லட்சங்கள் ஆகும் என்று நினைத்திருந்தார். ஆனால், 4 ஆண்டுகளில் ஆன செலவோ ஏறத்தாழ 4 கோடி ரூபாய் ஆனதாம்.

அதே நேரத்தில், அந்த சொந்த வீட்டின் பால்கனியில் நின்று ஒரு பக்கம் மலை, மற்றொரு பக்கம் கடல் என இயற்கை அழகை ரசித்தபடி பருகும் ஒரு தேநீருக்கு, இதுபோல் எவ்வளவு கஷ்டத்தையும் சமாளிக்கலாம் என்று அங்கு குடியேறியவர்கள் தெரிவித்துள்ளனர்.