கிறிஸ்துமஸ் பண்டிகை.. இந்த கேக் வெட்டினால் தங்க மோதிரம் கிடைக்கும் - இப்படி ஒரு காரணமா?
கிறிஸ்துமஸ் கேக் உருவான வரலாறு பற்றி விவரமாக பார்கலாம்.
கேக்
உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருவது வழக்கம். வீடுகள்,தேவாலயங்கள் யாவும் வண்ண மின் விளக்குகாளால் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
ஊர்வலம் வருவதை பார்த்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். இப்படியாக ஒருப்பக்கம் இருந்தால் மறுப்பக்கம் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான். கேக் இந்த பண்டிகையின் மிக முக்கிய உணவாக கருதப்படுகிறது.
கேக் நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஆரம்ப காலத்தில் கேக் என்பது பசிக்கு சாப்பிடும் உணவாக இருந்தது. கேக் தோன்றுவதற்கு முன்னர் அது கஞ்சியாக தான் குடிக்கப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் கிறித்தவர்கள் நோம்பு இருப்பார்கள்.
அப்போது நீண்ட நேரம் பசி தாங்கும் அளவுக்கு ஒரு கஞ்சியினை தயார் செய்தார்கள். இங்கிலாந்தில், பிளம் கஞ்சியை கிறிஸ்மஸ் ஈவ் அன்று மக்கள் சாப்பிட்டனர். அதில் நிறைய ஆரஞ்சு பழங்கள், திராட்சைகள், முந்திரிகள், பாதாம் , பிஸ்தா, பழங்கள், ஓட்ஸ், தேன் அல்லது
தங்க மோதிரம்
இனிப்பு சிரப்புகள் ஆகியவற்றை கலந்து கிறிஸ்துமஸ் கஞ்சி தயாரிக்கப்பட்டது. அதுவே மறுவி வெண்ணெய், மாவு, முட்டை எல்லாம் சேர்த்து சூடாக்கி கேக்காக மாற்றினர். அன்றைய காலத்தில் கேக் செய்ய தேவையான பெரிய ஓவன் அடுப்புகள் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இருந்தது.
பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக், பிளம் கேக்காக பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இன்றைய செயல் முறைகள் கிறிஸ்துமஸ் மாதத்திற்கு முன்பு குடும்பத்தினர் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்த கேக்கை செய்கின்றனர். அந்த சமயத்தில் இந்த கேக் செய்யும் போது வெள்ளி, தங்க நாணயங்கள், மோதிரம், நகைகள்
போன்றவற்றையும் சேர்ப்பது பணக்காரர்களின் வாடிக்கையாக இருந்தது. இந்த கேக் பேக் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் வரை யாரும் சாப்பிடாமல் வைத்திருப்பார்கள். அவ்வப்போது கேக்கில் உள்ள சிறு துளைகளில் மது ஊற்றுவார்கள். நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்று வெட்டப்படும். விஸ்கி டண்டீ என்று அழைக்கப்படும் பாரம்பரிய இந்த கேக் ஸ்காட்டிஷ் நாட்டில் இருந்து வந்தது. பொதுவாக இந்த கேக்கை வெட்டும்போது அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு அதில் உள்ள மோதிரம், தங்க, வெள்ளி நாணயங்கள் போன்றவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.