தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்
உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள்,தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் வண்ண மின் விளக்குகாளால் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது.
கிறிஸ்துமஸ் தாத்தக்கள் சாலையோரம் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர், கரூரில் உள்ள பழைமை வாய்ந்த புனித தெரசா அம்மாள் அன்னை தேவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நள்ளிரவில் பங்குத்தந்தை அந்தோணி ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் 12 மணிக்கு குழந்தை இயேசு பிறப்பது போன்ற காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு செய்து காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதே போல் , ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கி கொண்டாடப்பட்டது.
ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு தம் பாவங்களைப்போக்க பாலனாக அவதரித்த இயேசுபெருமானை வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பு பண்டிகையை ஒட்டி சுமார் 45 அடி உயரம் 100 அடி நீளம் இருபது லட்ச ரூபாய் பொருட்செலவில் "பாபிலோன் தொங்கும் தோட்டம்" வடிவிலான மிக பிரம்மாண்ட குடில் உருவாக்கப்பட்டது.
இந்த குடிலை 23ஆம் தேதி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மத்திகோடு சேகர சபை போதகர் ஸ்டீபன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த பிரமாண்ட குடிலை காண ஏராளமானோர் பார்வையிட வந்ததால் கூட்டம் அலைமோதியது.