பள்ளி மாணவிகள் ; 25 கன்னிப்பெண்களுடன் அதிபர் கிம் ஜாங் உன் உல்லாசம் - போட்டுடைத்த பெண்!
வட கொரிய அதிபர்காக தேர்தெடுக்கப்படும் கன்னி பெண்களை குறித்து யோன்மி பார்க் என்ற இளம்பெண் கூறியுள்ளார்.
கிம் ஜாங் உன்
யோன்மி பார்க் என்ற பெண் வடகொரியாவின் இருந்து தப்பித்தவர் ஆவார். அவர் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் குறித்து கூறிய தகவல்களை அண்மையில் வங்கதேசத்தின் 'தி டெய்லி ஸ்டார்' ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிம் ஜாங் உன் -க்கு பிரத்யேகமாக பெண்கள் உள்ள மகிழ்ச்சி அணி உள்ளது.
அதற்கான பெண்கள் கவர்ச்சி மற்றும் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதிபர்காக இளம்பெண்களை தேர்வு செய்ய பள்ளிகள், வகுப்பறைகளுக்கு அதிகாரிகள் வருவார்கள். சில அழகான பெண்களைக் கண்டுபிடித்தவுடன், அவர்கள் முதலில் செய்வது அந்த பெண்களின் குடும்ப,
அரசியல் அந்தஸ்தை ஆராய்வர்.வட கொரியாவிலிருந்து தப்பியோடிய அல்லது தென் கொரியா அல்லது பிற நாடுகளில் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட எந்தவொரு பெண்ணையும் அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். அடுத்ததாக அவர்களுக்கு கன்னித்தன்மைக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
கன்னிப்பெண்கள்
சிறிய குறைபாடுகள் இருந்தால் கூட அந்த பெண்ணை நிராகரித்து விடுவார்கள். நாடு முழுவதும் தேடி சில பெண்கள் மட்டுமே அழைத்துச்செல்லப்படுவார்கள். அங்கு அந்த பெண்களின் வேலை கிம் ஜாங் உன்-ஐ திருப்தி படுத்துவது மட்டுமே. மகிழ்ச்சி அணி மொத்தம் 3 பிரிவுகளை கொண்டது, ஒன்று மசாஜில் நிபுணம்,
கிம் ஜாங் உன் மற்றும் அவரது கூட்டாளிகளை திருப்திபடுத்துவதில் நிபுணம், மூன்றாவது பாலியல் நடவடிக்கை சார்ந்தது. இந்த அணியில் பெண்களை சேர்க்கையில் அவர்களது பெண்களின் பெற்றோரிடம் இதற்கு சம்மதமும் பெறப்படும். கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பதால் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.
மேலும் அந்த பெண்கள் 20 வயதை அடைந்துவிட்டால், தலைவரின் மெய்க்காப்பாளர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த மகிழ்ச்சி அணி வழக்கம் முதலில் கிம் ஜாங் உன் தந்தை 1970களில் பின்பற்றியது தற்போது கிம் ஜாங் உன் இதனை பின்பற்றுகிறார். இளம் பருவ சிறுமிகளுடன் பாலியல் நெருக்கம் கொண்டிருப்பது தனது ஆயுளை நீட்டிக்கும் என கிம் ஜாங்-இல் நம்பினார். இருப்பினும் 70 வயதில் மாரடைப்பால் இறந்தார்.