சீண்டி பார்த்த அண்டை நாடு.. போருக்கு தயாரான வடகொரியா - அதிபர் அதிரடி!
தனது அண்டை நாடான மீது போர் தொடுக்க தயாராக கூறி வடகொரியா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இணைந்த நாடுகள்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவின் கடற்பகுதியில் காணப்பட்டது.
இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் வருகிற 21 மற்றும் 24-ம் தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என்று கிம் ஜாங் உன் கருதியுள்ளார்.
போருக்கு தயார்
இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார், அவர் பாதுகாப்பு மந்திரியாகவும் உள்ளார். மேலும், அதிகாரிகளை போருக்கு தயாராகும்படி கூறியுள்ளார், பின்னர், ஆயுத கிடங்கிற்கு சென்று அங்கு பீரங்கி, என்ஜின், ஏவுகணை போன்ற ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய கேட்டுள்ளார்.
அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.