சுற்றியும் அவ்வளவு பெண்கள்; மேடையில் கதறி அழுத வடகொரிய அதிபர் - அவரின் கோரிக்கை..?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேடையில் கண்கலங்கி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடகொரியா
உலகின் மர்மமான ஒரு நாடாக வடகொரியா உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அதிகளவில் வெளியில் தெரிவதில்லை. ஏனெனில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவில் அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வடகொரியா நாட்டு பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் அதிபர் கிம் ஜாங் உன் கண்கலங்கி அழுதுள்ளார்.
அந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும் தான் என கூறப்படுகிறது. குழந்தை பிறப்பு விகிதம் தற்போது வடகொரியாவில் சரிந்து வருவதால் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிபர் கோரிக்கை
இது தொடர்பாக, தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் பேசியதாவது "நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இதனை பேசும்போது கண்கலங்கிய அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1990ல் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். இதையடுத்து வடகொரியாவின் மக்கள்தொகை என்பது சரிய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.