குழந்தைகளுக்கு தொடரும் மரண தண்டனை; என்ன காரணம்? கொடுமையின் உச்சத்தில் நாடு!

North Korea
By Sumathi Jul 16, 2024 09:48 AM GMT
Report

30 குழந்தைகளுக்கு வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மரண தண்டனை

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உள்ளார். உலகின் மற்ற நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது. இதில், ஊடகம் தொடங்கி அனைத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

north korea

குறிப்பாக தென் கொரிய சீரியல்களை பார்க்கக் கூடாது என்று வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

என்ன காரணம்? 

இதற்கிடையே தடைசெய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தாக பிடிபட்ட 30 நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

kim jong un

இது தொடர்பாகத் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "30 பேருக்கு அவர்கள் மரண தண்டனை விதித்துள்ளனர். இதை ஏற்கவே முடியாது. 3 சட்டங்களின் அடிப்படையில் இந்த மரண தண்டனை விதித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.