27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

Viral Video Uttar Pradesh India
By Vidhya Senthil Oct 06, 2024 11:43 AM GMT
Report

நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் கார் சிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 27வது மாடியில் தம்பதியினர் மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.

uttar pradesh

இந்த சுழலில் நேற்று அந்த குழந்தையின் அப்பா வேலைக்குச் செல்ல, அம்மா சமையலறையிலிருந்துள்ளார்.குழந்தை பால்கனியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தை திடீரென்று கீழே தவறி விழுந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய் குழந்தையை தேடிப்பார்த்துள்ளார் .

சுமார் 9 மணி நேரம்; ஆழ்துளைக்குள் போராடிய 3 வயது சிறுமி - இறுதியில் நடந்த சோகம்!

சுமார் 9 மணி நேரம்; ஆழ்துளைக்குள் போராடிய 3 வயது சிறுமி - இறுதியில் நடந்த சோகம்!

அப்போது  பெண் குழந்தை 12வது மாடி பால்கனியில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்தியுள்ளார்.

பெண் குழந்தை

இதையடுத்து குழந்தை உடனடியாக அருகில் உள்ள சர்வோதயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வேகமாகப் பரவிவருகிறது.

3 year old kid

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்தது. அப்போதும் அக்கம் பக்கத்தினர் தான் அந்த குழந்தையை மீட்டது குறிப்பிடத்தக்கது.