சுமார் 9 மணி நேரம்; ஆழ்துளைக்குள் போராடிய 3 வயது சிறுமி - இறுதியில் நடந்த சோகம்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுயநினைவின்றி மீட்கப்பட்டது.
போராடிய குழந்தை
குஜராத், தேவபூமி துவாரகா மவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தில் 3 வயது மதிப்புடைய குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது.
சுமார் 1 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டின் அருகே இருந்த திறந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. உடனே, குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்பு குழுவினரை தொடர்புக்கொண்டனர். தகவலறிந்த மாவட்ட மீட்புக்குழு நிர்வாகம் மீட்பு பணியில் ஈடுப்பட்டது.
மூச்சுத்திணறல்
பின்னர் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையும் மீட்பு பணிக்காக வந்தது. சுமார் 9 மணிநேர போரட்டத்திற்கு பின் 30 அடி ஆழம்கொண்ட ஆழ்துணைக்கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்கள் சுயநினைவின்றி இருப்பதை அறிந்தனர்.
உடனே குழந்தை அருகில் உள்ள மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குஜராத் மாவட்ட துணை ஆட்சியர் ஹெச்.பி.பகோரா தெரிவித்துள்ளார். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.