அந்த தமிழக வீரரை இனி யாரும் வாங்க மாட்டாங்க; என்ன பன்றாரு அவரு? கடுப்பான சேவாக்!
ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துவீச்சு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தினேஷ் கார்த்திக், சாய் சுதர்ஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், நடராஜன் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால், ராஜஸ்தான் வீரர் அஷ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி ரன்களையும் அதிகளவில் விட்டுக்கொடுத்துள்ளார். இதனிடையே விக்கெட் எடுப்பதை விட ராஜஸ்தான் அணிக்காக ரன்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அஷ்வின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஷ்வினின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.
சேவாக் கவலை
அவர் கூறியதாவது "விக்கெட்டுகளை எடுக்கும்போது பந்து வீச்சில் எகனாமி முக்கியமல்ல என்று அஷ்வின் கூறினார். ஆனால், புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லையென்றால் அடுத்த வருடம் அஷ்வினை ஏலத்தில் கூட யாரும் வாங்க மாட்டார்கள்.
ஒரு பவுலரை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது அவர் 25 - 30 ரன்களை மட்டும் கொடுக்க வேண்டும் அல்லது நிறைய விக்கெட்டுகளை எடுத்து 2 - 3 ஆட்டநாயகன் விருதுகளை வெல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பீர்கள். சாஹல், குல்தீப் போன்ற அஷ்வினுடைய போட்டியாளர்கள் இங்கே விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். நாம் ஆப் ஸ்பின் பந்துகளை வீசினால் அடி வாங்குவோம் என்று அஷ்வின் நினைக்கிறார்.
அதனால் கேரம் பந்துகளை வீசும் அவர் விக்கெட்டுகள் எடுப்பதில்லை. எனவே விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தால் அஷ்வின் போன்றவருக்கு என்னுடைய அணியில் இடம் கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.