2-வது முறை நடந்த தவறு - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அதிரடி தடை?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அபராதம்
ஐபிஎல் தொடரில் பவுலிங் செய்யும் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 19 ஓவர்களை வீசி முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் அந்த அணியின் 20-வது ஓவரின் போது 4 ஃபீல்டர்கள் மட்டுமே பவுண்டரி எல்லைக்கு அருகே நிற்க முடியும்.
மேலும், பவுலிங் செய்யும் அணியின் கேப்டனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் இரண்டாவது முறை நடந்தால் ரூ. 24 லட்சமும், மூன்றாவது முறை அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும்.
சஞ்சு சாம்சன்
இந்நிலையில் இரண்டாவது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அபராதம் செலுத்தவுள்ளார். முன்னாதாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இதே தவறை செய்ததால்,
அவருக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் ஏதேனும் போட்டியில் ராஜஸ்தான் அணி மூன்றாவது முறையாக இந்த தவறை செய்தால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.