வான்கடேவில் வித்தியாசமாக செயல்படும் பாண்ட்யா - அந்த திறனும் குறைந்துள்ளதாம்!
அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறன் பாண்ட்யாவிடம் குறைந்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
மும்பை தோல்வி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் பேட்டிங்கின்போது இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இர்பான் பதான்
ஹர்திக் பாண்ட்யா நல்ல பினிஷிங் கொடுக்கத் தவறியதால் கடைசியில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்காதது, தோல்விக்கு முக்கிய காரணமானது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறன் பாண்ட்யாவிடம் குறைந்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது.
பெரிய கண்ணோட்டத்தில் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாகும். வான்கடே மைதானத்தில் அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். ஆனால் சிறிய உதவி இல்லாத பிட்ச்கள் அவருக்கு கவலையாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.