Quantum dots கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியல் நோபல் பரிசு அறிவிப்பு!

World
By Vinothini Oct 05, 2023 06:45 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் ஆல்பிரட் பெர்னார்டு நோபல். இவர் ஒரு வேதியியலாளர், பொறியாளர், தொழிலதிபர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர், இவரது உயில்படி 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய 5 துறைகளில் சாதனை பெற்றவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

nobel-prize-for-3-scientists-who-found-quantum-dot

தற்பொழுது இந்த ஆண்டிற்கான (2023) நோபல் பரிசு கடந்த 2-ம் தேதி முதல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் அமைப்பு அறிவித்து வருகிறது. முதல் நாளில் மருத்துவம், 2வது நாளில் இயற்பியல், 3-ம் நாளான நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பீர் பாட்டில் இந்த 2 கலர் மட்டும் தான் - பின்னணி தெரியுமா?

பல ஆண்டுகளாக பீர் பாட்டில் இந்த 2 கலர் மட்டும் தான் - பின்னணி தெரியுமா?

விஞ்ஞானிகள்

இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மவுங்கி ஜி பவெண்டி (62), அமெரிக்காவின் லூயிஸ் இ புருஸ் (80), ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி ஐ எகிமோவ் (78) ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு (ரூ.8.32 கோடி) பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel-prize-for-3-scientists-who-found-quantum-dot

இவர்கள் குவான்ட்டம் புள்ளிகள் என்றழைக்கப்படும் குறு துகள்களை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

nobel-prize-for-3-scientists-who-found-quantum-dot

இந்த குவான்ட்டம் புள்ளிகள் தொலைக்காட்சி பெட்டி, எல்இடி விளக்குகளில் ஒளியை பரவச் செய்யவும் உடலில் உள்ள கட்டிகளை அகற்றுவதில் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் பயன்படுகின்றன.