2022 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Sweden
By Sumathi Oct 03, 2022 11:48 AM GMT
Report

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

2022 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! | 2022 Nobel Prize In Physiology

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஸ்வான்டே பாபோ

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! | 2022 Nobel Prize In Physiology

'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக' இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.