பல ஆண்டுகளாக பீர் பாட்டில் இந்த 2 கலர் மட்டும் தான் - பின்னணி தெரியுமா?

World
By Vinothini Oct 03, 2023 11:26 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பீர் பாட்டில் பல ஆண்டுகளாக 2 கலரில் மட்டும் தான் அதன் காரணம் தெரிந்துகொள்ளுங்கள்.

மதுபானம்

உலகில் மதுபானங்கள் பல வகைகளில் உள்ளன, அதில் அதிகமானோர் அருந்துவது பீர் தான். அந்த பீர் பானத்தையும் பல்வேறு பீர் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மற்ற மதுபானங்கள் வெவ்வேறு கலரில் வரும்போது பீர் பாட்டில் பழுப்பு மற்றும் பச்சைஆகிய 2 கலரில் மட்டும் தான் வரும், அதனை கவனித்ததுண்டா?.

do-you-know-why-beer-bottle-come-only-in-2-colours

அதற்கு ஒரு குட்டி கதை உண்டு, தெரிந்துகொள்ளுங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தான் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டது, அங்கு முன்னதாக வெளிப்படையான பாட்டில்களில் பீர் பரிமாறப்பட்டது.

வெளிப்படையான பாட்டில்கள் சூரிய ஒளியில் படுகையில், ​​புற ஊதா கதிர்கள் உள்ளே உள்ள பீர் விரைவாக வேதியல் மாற்றம் அடைவதை கவனித்தனர். அதன் சுவையும் மாறுபட்டது, மேலும் பீர் குடித்த பிறகு பலருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

ரூ. 2,685 கோடி மதிப்புள்ள 7 தொழிற்சாலைகள்.. வெறும் ரூ.90-க்கு விற்ற ஃபேமஸ் நிறுவனம் - என்ன காரணம்?

ரூ. 2,685 கோடி மதிப்புள்ள 7 தொழிற்சாலைகள்.. வெறும் ரூ.90-க்கு விற்ற ஃபேமஸ் நிறுவனம் - என்ன காரணம்?

2 கலர்

இந்நிலையில், பாட்டிலுக்குள் பீரை எப்படி சரியான நிலையில் வைத்திருப்பது என்று ஆராய்ச்சி தொடங்கியது. அப்பொழுது தான் சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க பொதுவாக கண்ணாடிகள் பல்வேறு நிழல்களில் கிடைக்கின்றன. அதனால் ஒளியை சிதறவைக்கும் நிறங்களில் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பீர் பாட்டில் இந்த 2 கலர் மட்டும் தான் - பின்னணி தெரியுமா? | Do You Know Why Beer Bottle Come Only In 2 Colours

அப்படி தான் பழுப்பு நிற பாட்டில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி திரவ பீரை உள்ளே ஊடுருவ முடியாமல் பீர் நீண்ட நேரம் நன்றாக இருக்கும். வீணாகவில்லை இது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பீர் பாட்டில்கள் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, ​​அதிகப்படியான பழுப்பு நிற பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

do-you-know-why-beer-bottle-come-only-in-2-colours

ஆனால், நிறுவனங்கள் பீர் பாட்டில்களை ஆர்டர் செய்தாலும், அவற்றைப் பெற முடியாத அளவுக்கு தேவை அதிகமாக இருந்தது. இதன் விளைவாக, அவர்கள் பச்சை பாட்டில்களில் பீர் விற்கத் தொடங்கினர். அதன் பின்னர் தான் இந்த இரண்டு நிறங்களில் பீர் இன்று வரை விற்கும் பழக்கம் தொடங்கியது.