ரூ. 2,685 கோடி மதிப்புள்ள 7 தொழிற்சாலைகள்.. வெறும் ரூ.90-க்கு விற்ற ஃபேமஸ் நிறுவனம் - என்ன காரணம்?

European Union Russian Federation Netherlands
By Vinothini Sep 02, 2023 06:24 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

கோடி கணக்கில் விலைபோகும் தொழிற்சாலையை வெறும் ரூ.90-க்கு விற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போரினால், இருதரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, உணவு தானியம் முதல் கச்சா எண்ணெய் வரை பல்வேறு பொருட்களின் விலையும் உலக அளவில் அதிகரித்துள்ளது.

famous-heineken-sold-its-industries-for-1-euro

மேலும், இந்த போரினால் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் ஐரோப்பாவை சேர்ந்த பல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறது.

ஃபேமஸ் பீர் நிறுவனம்

இந்நிலையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெனிகேன் நிறுவனம் பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பீர் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தது. இது தற்பொழுது போரினால் நஷ்டத்தை சந்தித்துள்ளது, இதனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்னெஸ்ட் குழுமத்திடம் தனது ஆலைகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது. ஹெனிகேனுக்கு சொந்தமாக ரஷ்யாவில் ஏழு ஆலைகள் உள்ளன.

famous-heineken-sold-its-industries-for-1-euro

இந்த ஆலைகளில் சுமார் 1,800 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். எனவே தொழிற்சாலைகளை கைவிட்டு விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்காக காத்திருந்தது, தற்பொழுது அனுமதி கிடைத்ததும், தனது ஏழு தொழிற்சாலைகளையும் வெறும் 1 யூரோவுக்கு விற்பனை செய்துள்ளது ஹெனிகேன் நிறுவனம். இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 90 ரூபாய் விற்பனை செய்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.