சென்னை : 100 வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கு தலா ரூ.13 கோடி அனுப்பிவைத்த எச்.டி.எப்.சி வங்கி!
சென்னையில் எச்.டி.எப்.சி வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி கிளையில் இருந்து 100 வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி பணம் தவறுதலாக அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கு புதிய மென்பொருளை நிறுவிய போது ஏற்பட்ட குளறுபடியே காரணம் எனக் கூறப்படுகிறது. 100 பேரின் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்ற நிலையில், உடனடியாக குறிப்பிட்ட 100 வங்கிக்கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே, வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியபோது,
வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் போது, வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.