3 மாதம் சூரிய ஒளியே வராது; அதற்காக ஒரு செயற்கை சூரியனையே உருவாக்கிய கிராமம்!
ஒரு கிராமம் மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
விக்னெல்லா
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே அமைந்துள்ள கிராமம் விக்னெல்லா. இந்த கிராமத்தில் 200 பேர் வசிக்கின்றனர்.
இங்கு பல நூற்றாண்டுகளாக, சூரியன் மறைந்து, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றும் செயல்முறை இருந்து வருகிறது.
அதன்படி, நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதிவரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும். இதனைத் தொடர்ந்து, 2005ல் சுமார் ரூ.1 கோடி திரட்டப்பட்டு, பின்னர் ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பெரும் சாதனை
2006ல், கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். அதன் எடை 1.1 டன். இது 1100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதில், குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொளிக்கும். அதன் அடிப்படையில் ராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.