video call பண்ண இனி சிம் கார்டு இன்டர்நெட் வேண்டாம் - மத்திய அரசு கொண்டு வரும் புது வசதி

Technology
By Karthick Jan 17, 2024 06:24 AM GMT
Report

 இனி வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்க்கு சிம் கார்டு, இணையதள வசதி தேவைப்படாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

(D2M)

இதற்காக, டைரக்ட் டூ மொபைல்(direct to mobile) என்ற புதிய திட்டத்தினை மத்திய அரசு சோதனை செய்து வருகிறது.

no-simcard-internet-required-for-video-call

டெல்லியில் நடைபெற்று முடிந்த ஒளிபரப்பு உச்சி மாநாட்டில் இது குறித்து பேசியிருந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துரையின் செயலர் அபூர்வா சந்திரா, இந்தியாவிலேயே தயாரித்த டைரக்ட் டு மொபல் (D2M) தொழில்நுட்பத்தின் மூலம் இனி சிம்கார்டு மற்றும் இணையதள வசதி இல்லாமலேயே வீடியோ ஸ்ட்ரிமிங் செய்ய முடியும் என தெரிவித்திருந்தார்.

இனி சென்னை - பெங்களூரு - மைசூர்; வெறும் 2 மணி நேரம்தான் - அதிவேக புல்லட் ரயில் திட்டம்

இனி சென்னை - பெங்களூரு - மைசூர்; வெறும் 2 மணி நேரம்தான் - அதிவேக புல்லட் ரயில் திட்டம்

இதற்காக 470-582 மெகா ஹெர்ட்ஸ்(Mega Hertz) அலைக்கற்றையை ஒதுக்குவதற்காக வலுவான வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சோதனை..

25-30 % வீடியோ ஸ்ட்ரிமிங்கினை (D2M) க்கிற்கு மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க்குகளின் நிலை மேம்படும் என கூறப்படுகிறது.

no-simcard-internet-required-for-video-call

இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியினை துரிதப்படுத்தும். இது தொடர்புடைய சோதனை விரைவில் 19 நகரங்களில் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு பெங்களூரு,கர்தவ்யா பாத் மற்றும் நொய்டாவில் இது தொடர்புடைய சோதனை நடைபெற்றுள்ளது.

கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா? இனி இதுக்கெல்லாம் கட்டணம் - புது ரூல்ஸ்!

கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா? இனி இதுக்கெல்லாம் கட்டணம் - புது ரூல்ஸ்!

நாட்டில் உள்ள 28 கோடி குடும்பங்களில் 18 கோடி குடும்பங்களிலேயே தொலைக்காட்சி வசதி உள்ளது. டைரக்ட் டு மொபல் வசதி மூலம் தொலைக்காட்சி இல்லாத குடும்பங்களிற்கும் இந்த சேவை சென்றடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.