இனி சென்னை - பெங்களூரு - மைசூர்; வெறும் 2 மணி நேரம்தான் - அதிவேக புல்லட் ரயில் திட்டம்
சென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில் (புல்லட்) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை - மைசூரு
சென்னை - பெங்களூரு - மைசூருவை இணைக்கும் லட்சிய திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, 435 கி.மீ. தூரத்துக்கு அதிக வேக ரயில் போக்குவரத்து (புல்லட் ரயில்) தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், பயண நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக குறையும். இந்த ரயில் அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் செல்லும். 750 பேர் பயணம் செய்யலாம்.
அதிவேக ரயில் (புல்லட்)
தமிழகத்தில் சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கர்நாடகா மாநிலத்தில் பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னப்பட்டிணா, மாண்டியா, மைசூரு ஆகிய 9 நிலையங்களை கொண்ட அதிவேக ரயில் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
மேலும், பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையில் பெங்களூரு அருகே ஹோஸ்கோட் மற்றும் சென்னை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே அதிவிரைவு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சில மாதங்களில் சீரமைப்புக்கான கணக்கெடுப்பு முடிந்தபிறகு இதுபற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதன்மூலம், தொழில் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் விரைவு ரயிலில்பயண நேரம் 6 மணி 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.