கோவை-பெங்களூரு வந்தே பாரத்; இவ்வளவு சீக்கிரமா? முழு விவரம் இதோ..
கோவை - பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
வந்தே பாரத்
தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே விரைவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 30ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் வழியாக 5 மணி 40 நிமிடங்களில் கோயம்புத்தூரில் இருந்து அதிகாலை புறப்பட்டு பெங்களூரில் இருந்து மதியம் சென்றடையும்.
கோவை - பெங்களூரூ
பெங்களூரில் மதியம் புறப்பட்டு கோவைக்கு முன்னிரவு வந்து சேரும். இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்கான சோதனை ஓட்டத்தை கோவை ரயில் நிலையத்தில் கற்பூரம் காட்டி பூஜை செய்த பின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.