ஹிஜாப் விவகாரம் : பெங்களூரு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த 2 வாரங்களுக்கு தடை
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
மேலும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையில் தனியாக அமரவைத்த சம்பவங்களும் சில கல்லூரிகளில் அரங்கேறியது.
Gatherings, agitations or protest of any type within the area of 200-meter radius from the gate(s) of schools, PU colleges, degree colleges or other similar educational institutions in Bengaluru city, prohibited for two weeks with immediate effect: Police Dept, Govt of Karnataka pic.twitter.com/zoxCYQ9SOo
— ANI (@ANI) February 9, 2022
இந்த நிலையில் பெங்களூரு நகரில் கூட்டங்கள் நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் எழுந்து வரும் நிலையில் பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார்.