இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டாம் - எதெல்லாம் தெரியுமா?
இரண்டு நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல முடியும்.
பாஸ்போர்ட் வேண்டாம்..
விசா இல்லாமல் கூட சில நாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால், பாஸ்போர்ட் இல்லையென்றால் வெளிநாட்டுக்கு செல்லமுடியாது என்பது தான் நாம் அறிந்தது.
ஆனால், இந்தியர்கள் இரண்டு நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல முடியும். ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து செல்லலாம்.
நேபாளம்
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். இந்தியா - நேபாளம் நாடுகள் 1,751 கிலோ மீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு ரயில் சேவையும் உள்ளது. இங்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை. இந்திய அரசு கொடுத்த எதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் போதும்.
பூடான்
இந்தியாவுடன் 699 கிலோ மீட்டர் நீளத்தை பூடான் பகிர்ந்து கொள்கிறது. இங்கு செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இந்திய அரசு வழங்கிய அடையாள ஆவண சான்றிதழ் ஏதாவது ஒன்று போதுமானது.
ஆனால், நீண்ட நாட்கள் தங்க திட்டமிட்டால் அங்குள்ள அதிகாரிகளிடம் இதற்கான அனுமதியை பெற வேண்டும். அதன் எல்லையில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.