உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : சிங்கப்பூர் முதலிடம் - இந்தியாவின் நிலை தெரியுமா?
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஸ்போர்ட்
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2024 ம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இதனடிப்படையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
ஜப்பான்
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் 3 வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் 4 வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். ஆஸ்திரேலியாவும் போர்ச்சுகலும் 189 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று 5வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்தியா
இந்த பட்டியலில் கனடா 7வது இடத்தையும், அமெரிக்கா 8 வது இடத்தையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 9 வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவின் பாஸ்போர்ட் 82 வது இடத்தில் உள்ளது. இந்தியா பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்தியாவுடன் செனகல் மற்றும் தஜிகிஸ்தான் 82 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 85 வது இடத்தில் இருந்தது.
இதில் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா 93 வது இடத்திலும், பாகிஸ்தான் 100 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 103 வது இடத்திலும் உள்ளது.