இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட், விசாவே தேவையில்லை - இந்திய அரசின் புதிய விதிகள்!

India Passport Flight World
By Vinothini Sep 06, 2023 06:37 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சில நாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை, அந்த இடங்களை காண்போம்.

பாஸ்போர்ட்

இந்திய நாட்டிற்குள் மக்கள் தடைகள் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் பாஸ்போர்ட்டும் விசாவும் மிக அவசியம். பாஸ்போர்ட் இல்லாத மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது.

one-can-travel-without-passport

இருப்பினும், பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியாவைச் சேர்ந்த சில நாடுகளுக்கு நம் இந்திய மக்களால் செல்ல முடியும். அந்த நாடுகள் பூட்டான் மற்றும் நேபாள், இங்கு பாஸ்போர்ட் இல்லாமல் உங்கள் புகைப்பட அடையாள அட்டைகளில் ஒன்றைக் கொண்டு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

விசா தேவையில்லை

இந்நிலையில், பூட்டானுக்கு செல்ல வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், குழந்தைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது கல்விப் பள்ளி அடையாள அட்டையை எடுத்து செல்லவேண்டும். நேபாளத்திற்கு, இந்தியர்கள் அவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் மட்டுமே தேவை.

one-can-travel-without-passport

இதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையை காட்டலாம். மேலும், சில நாடுகளுக்கு விசா இல்லமால் செல்லலாம், அந்த நாடுகள் மாலத்தீவு, மொரிஷியஸ், தாய்லாந்து, மக்காவ், இலங்கை, பூட்டான், நேபாளம், கென்யா, மியான்மர், கத்தார், கம்போடியா, உகாண்டா, சீஷெல்ஸ், ஜிம்பாப்வே மற்றும் ஈரான் ஆகும்.