நித்யானந்தாவுக்கு எதிராக 'புளூகார்னர்' நோட்டீஸ் அனுப்பபட்டதா? : விளக்கம் கொடுத்த இன்டர்போல்
நித்யானந்தாவை பிடிக்க எந்த நோட்டீஸ்ம் அனுப்பவில்லை என இன்டர் போல் விளக்கமளித்துள்ளது.
சாமியார் நித்யானந்தா
தனக்கென தனி நாடு ,தனி கொடி, தனி வங்கி , தனி பாஸ்போர்ட் என பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிதியானந்தா பல குற்ற வழக்குகளில் இந்திய அரசால் தேடப்படும் நபர் தன்னை கடவுளின் அவதாரமாகவும் , கைலசா தீவின் அதிபராகவும் இருக்கும் நித்தியானந்தா தன் மனம் கவர்ந்த பக்தர்களுக்ககா அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகின்றார்.
புளூகார்னர் நோட்டீஸ்
ஆனால் இதுவரை நித்தியானந்தா இருக்கும் இடத்தை யவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகின்றது, இந்த நிலையில் நித்யானந்தாவை பிடிக்க குஜராத் காவல்துறை சர்வதேச காவல்துறையான இன்டர்போலினை நாடியதாக தகவல் வெளியாகி அவருக்கு புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவரை தேடும் பணியில் உள்ளதாகவும் குஜாராத் காவல்துறை தரப்பில் செய்தி வெளியானது .
இன்டர்போல் விளக்கம்
இந்த நிலையில்நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.