இங்கிலாந்தில் மேற்படிப்புக்கு பிளான் பண்ணியிருக்கீங்களா? இந்திய மாணவர்கள் எச்சரிக்கை
இங்கிலாந்து மேற்படிப்பு குறித்து இந்திய மாணவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு
பல நாட்டு மாணவர்களும் இங்கிலாந்தில் மேற்படிப்பு படித்து, அங்கேயே செட்டிலாகும் எண்ணத்துடன்தான் அங்கு படையெடுக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இங்கிலாந்தில் வசிக்கும் ஜான்ஹவி ஜெயின் எனும் இந்திய மாணவி x தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் கவனம் பெற்றுள்ளது.
”இங்கிலாந்து வந்து படித்த தன்னுடைய பேட்ஜில் 90% பேருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் சென்று படித்தால் அங்கேயே வேலை கிடைத்துவிடும் என்பது இந்தியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதற்காக கடனை பெற்று இங்கிலாந்து செல்கிறார்கள்.
கவனம் தேவை
ஆனால் அங்கும் வேலை இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. முதுகலை படிப்புக்காக இங்கிலாந்தை ஆப்ஷனாக யாரும் கருத்தில் கொள்ளதீர்கள். ஏற்கெனவே பணம் இருக்கும் பார்டி எனில் கவலை வேண்டாம். ஆனால் கடன் வாங்கி வருகிறீர்கள் எனில் அதை செய்யாதீர்கள். பிசினஸ் தொடங்குங்கள். வேறு எதிலாவது முதலீடு செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 2 லட்சம்பேர் இதனை ரீ ஷேர் செய்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் கடந்த காலாண்டில் 42,000 வேலை வாய்ப்புகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இங்கு பட்டப்படிப்புக்கு குறைந்தது 10-15 லட்சம் ரூபாயும், முதுகலைக்கு 20-50 லட்சம் வரையும், பிஎச்டி போன்ற படிப்புகளுக்கு 18-30 லட்சமும் செலவாகும்.
தங்குமிடம், போக்குவரத்து, உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் மாதம் 2.5 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.