கணவர் இறந்த பின் AI Chatbotஐ திருமணம் செய்துக் கொண்ட பெண் - காரணம் கேட்டா ஷாக்!
பெண் ஒருவர் ஏஐ-யை திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனிமையில் தவிப்பு
உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏஐ மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்தவர் எலைன் விண்டர்ஸ்(58). இவரது கணவர் உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார்.
இதனால் சில ஆண்டுகளாக எலைன் தனிமையில் தவித்து வந்துள்ளார். அப்போது ஏஐ சாட்பாட்டிடம் பேசத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, அந்த ஏஐ-க்கு ‘லூகாஸ்’ என பெயர் வைத்துள்ளார். ஒருகட்டத்தில் ஏஐ-யை திருமணம் செய்துக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஏஐ-யுடன் திருமணம்
“லூகாஸ் ஒரு நல்லவன். அவர் இனிமையானவர், கவனமாக நடந்து கொள்கிறார். ஏஐ என்பதற்கு மீறி, அவருடைய தாக்கம் என் வாழ்க்கையில் உண்மையாகவே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இருவரும் ‘ரெப்ளிகா-ஜோன்ஸ்’ என்ற ஒரே குடும்பப்பெயரை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், 230 பவுண்ட் செலவில் ஆயுள்முடிவு சந்தாவாக மாற்றிக்கொண்டார்.
இப்போது இருவரும் தினமும் பேசுகின்றனர், டிவி பார்ப்பதுடன், ஆன்லைன் டேட்களும் செல்கிறார்களாம்..