அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு? அமைச்சர் முக்கிய தகவல்!

Tamil nadu S. S. Sivasankar
By Sumathi Jul 12, 2024 04:48 AM GMT
Report

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

 கட்டண உயர்வு

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் செல்போன் சார்ஜ் வசதி,

அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு? அமைச்சர் முக்கிய தகவல்! | No Fare Hike In Tn Government Buses

படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு நிர்வாகம் தெரியாமல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். 600க்கும் மேற்பட்டோர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டணம்; 25% உயர்வு - வெளியான முக்கிய தகவல்!

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டணம்; 25% உயர்வு - வெளியான முக்கிய தகவல்!

அமைச்சர் விளக்கம்

புதிதாக 7500 பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவு பெற்றுள்ளார். அப்படி இருக்கும்போது அரசு போக்குவரத்து கழகத்தை எப்படி தனியார் மயமாக்க முடியும். இலவச பயணங்களுக்காக போக்குவரத்து துறைக்கு தமிழகம் முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு நடப்பாண்டு ரூபாய் 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு? அமைச்சர் முக்கிய தகவல்! | No Fare Hike In Tn Government Buses

போக்குவரத்து தொழிலாளர்கள் மாதம் 1ம் தேதி சம்பளம் பெறுகின்றனர். அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது தற்போது கிடையாது.

மற்ற மாநிலங்களில் டீசல் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி உயர்த்தாமல் போக்குவரத்து கழகத்தில் நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.