தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டண உயர்வு : புதிய கட்டணம் யூனிட்-க்கு எவ்வளவு ?

V. Senthil Balaji DMK
By Irumporai Sep 10, 2022 04:46 AM GMT
Report

8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது.

மின் கட்டண உயர்வு 

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும்,அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டண உயர்வு : புதிய கட்டணம் யூனிட்-க்கு எவ்வளவு ? | New Electricity Tariff Hike In Tamil Nadu

இதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி இருந்த நிலையில், மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதையடுத்து, புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கட்டணம்

தமிழகத்தில் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாதம் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.72.50 உயர்ந்துள்ளது. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டண உயர்வு : புதிய கட்டணம் யூனிட்-க்கு எவ்வளவு ? | New Electricity Tariff Hike In Tamil Nadu

அதேபோல் மொத்தமாக 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

மேலும் , 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155ம், 700 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275ம், 800 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு.395ம், 900 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565ம் உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.