பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டணம்; 25% உயர்வு - வெளியான முக்கிய தகவல்!
ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
ரீசார்ஜ் திட்டம்
5ஜி திட்டத்தை மேம்படுத்துவதற்காக டெலிகாம் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிறகு 25 சதவீதம் ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் ஏர்டெல்லின் (airtel) சராசரி கட்டணத்தில் 29 ரூபாயும், ஜியோவின் (jio) சராசரி கட்டணத்தில் 26 ரூபாயும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
தொழில்துறையிலும், 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக ஒரு சந்தாதாரருக்கு 100 ரூபாய் அதிகரிக்கலாம். தேர்தலுக்குப் பிறகு விரைவில் இந்த கட்டண உயர்வை ஏர்டெல் மற்றும் ஜியோ கொண்டுவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், நெட்வொர்க் கவரேஜ் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவை அதிகரிக்கும் என்ற நிலையில், பயனர்கள் அதிவேக நெட்வொர்க் இணைப்பைத் தடையின்றி பெறலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.