5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல் : கொந்தளித்த ஆ.ராசா

DMK India
By Irumporai Aug 03, 2022 12:27 PM GMT
Report

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

2ஜி ஊழல்

 2010ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார்.

ஆகவே 2ஜி ஏலத்தில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் தேர்தலில் தோல்விய்டைய முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதி மன்றம் 

ஆ.ராசா குற்றச்சாட்டு

இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது.

இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமே முதலிடத்தில் இருப்பதாகவும் மொத்தம் 1.50 லட்சம் கோடி அளவில் ஏலம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது. இந்த நிலையில் திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா 5ஜி அலைக்ற்றில் பல லட்சம் கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல் : கொந்தளித்த  ஆ.ராசா | Former Minister A Raja Corruption 5G Auction

அதில் கடந்த முறை நடந்த 2ஜி,3ஜி,4ஜி யின் ஏலத்தை ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்று சுமார் 5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது 1.50 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 51 ஜிகா ஹர்ட்ஸ் கொண்ட 5ஜி-யை ரூபாய் 1.50 லட்சம் கோடிக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளனர். ஆனால் கடந்த முறை நடந்த 30 மெகா ஹர்ட்ஸ் விற்பனையில் 1.76 லட்சம் கோடி நஷ்டம் என வினோத் ராய் தெரிவித்திருந்தார்.

ஆதலால் டிராய் தலைவர் வினோத்ராய் யாருக்காக இப்படி செய்தார் என விசாரிக்க வேண்டும் என்றும் யாருக்காக இப்படி குறைந்த விலையில் 5ஜி அலைக்கற்று விற்கப்பட்டது என்பதை பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இதனால் 5ஜி அலைக்கற்று ஏலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறித்துள்ளார்