அந்த சேனலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சுதாரித்த சீமான்

Naam tamilar kachchi Tamil nadu Seeman Durai Murugan
By Sumathi Apr 16, 2025 04:30 AM GMT
Report

துரைமுருகனின் ‘சாட்டை’க்கும் நாதக-வுக்கும் தொடர்பு இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

சாட்டை சேனல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

seeman - durai murugan

அதில், “திருச்சி துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள்,

செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய்

3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய்

சீமான் விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் “சாட்டை” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

அந்த சேனலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சுதாரித்த சீமான் | No Connection Durai Murugan Sattai Ntk Seeman

இந்த சேனலில் நித்யானந்தாவை பேட்டியெடுத்து கேள்வி பதில் வடிவில் ஒளிபரப்பினார். இந்த வீடியோ கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சீமான் இவ்வாறு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.