அதிமுக கூட்டணி மட்டுமல்ல.. கூடவே இணையும் சீமான்? சென்னை வரும் அமித் ஷாவின் ப்ளான்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்.
அமித் ஷா சென்னை வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தின் மித் ஷாவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த சந்திப்பில் கூட்டணியை உறுதி செய்வார்கள் என கூறப்படுகிறது.
இந்த கூட்டணியிலேயே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களை உள் கூட்டணியாக கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பக்கமும் பாஜக பார்வை திரும்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி
இதில் குறிப்பாக நாம் தமிழர் பெயரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான் முன்னெடுப்புகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் பரவின.
ஆனால் இதை தற்போது சீமான் மறுத்துள்ளார். இது பாஜக - நாம் தமிழர் கூட்டணி மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

Viral Video: நொடிப் பொழுதியில் ஆக்டோபஸிற்கு ஏற்பட்ட ஆபத்து... மனிதர்களின் தவறால் ஏற்படும் கஷ்டம் Manithan
