பரவிய திருமண வதந்தி - கணவர், குழந்தைகளை அறிமுகம் செய்த நடிகை நிவேதா தாமஸ்!

Nivetha Thomas Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jul 04, 2024 12:06 PM GMT
Report

தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ். 

நிவேதா தாமஸ்

போராளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இதனையடுத்து ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தார்.

பரவிய திருமண வதந்தி - கணவர், குழந்தைகளை அறிமுகம் செய்த நடிகை நிவேதா தாமஸ்! | Nivetha Thomas Introduce Her Husband And 2 Sons

மேலும், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும் நடித்திருந்தார். இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் பரவின.

இவர் யாருனு தெரியுதா? அன்று அவ்வளவு உருவ கேலி - இன்று பிரபல நடிகை!

இவர் யாருனு தெரியுதா? அன்று அவ்வளவு உருவ கேலி - இன்று பிரபல நடிகை!

இதுதான் கணவர்

இந்நிலையில் இதுகுறித்து அவர் நடித்த 35 படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நிவிதா தாமஸ், "நான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வெளியான செய்திகள் பார்த்து என்னுடைய அம்மாவே ஆச்சரியப்பட்டார்.

பரவிய திருமண வதந்தி - கணவர், குழந்தைகளை அறிமுகம் செய்த நடிகை நிவேதா தாமஸ்! | Nivetha Thomas Introduce Her Husband And 2 Sons

அவர் என்னிடம் "குழந்தைகள் ஏதும் இருக்கா? என்று நக்கலாக கிண்டலடித்தார்" என்றார். மேலும், இதுதான் என் கணவர்.. இவர்கள் தான் என்னுடைய 2 மகன்கள் என படத்தில் தனக்கு கணவராகவும், மகனாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தி அரங்கத்தில் இருப்பவர்களை சிரிக்க வைத்துள்ளார் நிவேதா தாமஸ்.