சின்ன பொண்ணு சார்.. பரவால்ல எனக்கு மீனா தான் வேணும் - அடம்பிடித்த பிரபல நடிகர்!
நடிகை மீனாவுடன் 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தில் நடித்தது குறித்து நடிகர் ராஜ்கிரண் பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1990ல் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மீனா நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் 40 வருடமாக திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராஜ்கிரண் 'என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு வார பத்திரிகையில் மீனாவின் புகைப்படம் பார்த்தேன்.
ராஜ்கிரண் நெகிழ்ச்சி
அதைப் பார்த்துவிட்டு "இந்த பொண்ணு கதாநாயகிக்கு பொருத்தமாக இருப்பார்" என்று இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் சொன்னேன். அந்த பொண்ணு யாரு? என்னன்னு விசாரிச்சிட்டு போய் பேசுங்க என்று சொன்னேன்.

அதற்கு கஸ்தூரி ராஜா 'சார்.. என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க... இந்த பொண்ணு எப்படி சார்' என்று சொன்னார். இல்ல.. அந்த சோழையம்மா என்ற கதாபாத்திரம், அந்த பயந்த சுபாவம் அதற்கு மீனா பொருத்தமாக இருப்பார்.
நீங்கள் மீனாவிடம் பேசுங்கள் என்று சொன்னேன். அந்த படத்தில் சோழையம்மாவாக மீனா வாழ்ந்ததினால் தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது" என்று ராஜ்கிரண் பேசியுள்ளார்.
You May Like This Video
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan