முன்னாள் காதலிக்காக நடிகர் ஜி.எம்.குமார் செய்த செயல் - அதுவும் 3,500 கி.மீ!
தனது முன்னாள் காதலியை பார்க்க 3,500 கி.மீ கார் ஓட்டிச் சென்றதாக நடிகர் ஜி.எம்.குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜி.எம்.குமார்
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தோற்றம் கொண்டவர் நடிகர் ஜி.எம்.குமார். மேலும், வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார்.
3,500 கி.மீ பயணம்
இந்நிலையில் தனது முன்னாள் காதலியை பார்க்க 3,500 கி.மீ கார் ஓட்டிச் சென்றேன். மெட்ராஸ் , பெங்களூரு, கோவா மும்பை அதன் பின் மெட்ராஸ்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
