இவர் யாருனு தெரியுதா? அன்று அவ்வளவு உருவ கேலி - இன்று பிரபல நடிகை!
நடிகை திவ்ய பாரதியின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
திவ்ய பாரதி
நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் பலரை கவர்ந்தவர் நடிகை திவ்ய பாரதி. மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மதில்மேல் காதல், ஆசை ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். திவ்ய பாரதி, தனது கல்லூரி காலங்களில் உடல் அமைப்பு குறித்து கேலி செய்யப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
உடல் கேலி
அவர் கூறியதாவது "காலேஜ் படிக்கும் போது நான் ஃபாண்டா பாட்டில் அமைப்பு, எலும்புக்கூடு, பெரிய பட் கேர்ள் போன்ற பல பயங்கரமான கமெண்ட்களை பெற்றுள்ளேன். இது என்னை கடுமையாகப் பாதித்து.

என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னை தள்ளியது. மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. பின்னர் 2015-ல், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி எனது மாடலிங் பயணத்தை தொடங்கினேன். அதில் நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய புகைப்படத்திற்கும் பாராட்டுகளை பெற ஆரம்பித்தேன்.
வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டிருப்பது பரவாயில்லை. அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியது" என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திவ்ய பாரதியின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan