சிதையும் இந்தியா கூட்டணி - பாஜகவின் பக்கம் சாயும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ..!

BJP Narendra Modi Bihar
By Karthick Jan 26, 2024 04:04 AM GMT
Report

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ் குமார்

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், கூட்டணி விஷயத்தில் சற்று அதிரடியான நகர்வுகளை அவ்வப்போது மேற்கொண்டு தான் வருகின்றார். சென்ற 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2020-ஆம் ஆண்டின் பீகார் சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்தித்து ஆட்சி அமைத்தவர் பிறகு கூட்டணியில் இருந்து விலகினார்.

nitish-kumar-to-join-hands-with-bjp-again

அம்மாநிலத்தில் தற்போதைய எதிர்க்கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்து வரும் நிதிஷ் குமார் தான் முதலில் இந்தியா கூட்டணி உருவாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

nitish-kumar-to-join-hands-with-bjp-again

தொடர்ந்து பல நகர்வுகளுக்கு பிறகு இந்தியா கூட்டணி உருவாகி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லவுள்ளார் என்று கருத்துக்கள் வடஇந்திய அரசியலில் மிக பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.

நாற்காலியை காப்பாற்றி கொள்ள..'ஆமாம் சாமி" போட்டவர் பழனிசாமி - முதலமைச்சர்

நாற்காலியை காப்பாற்றி கொள்ள..'ஆமாம் சாமி" போட்டவர் பழனிசாமி - முதலமைச்சர்

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனதா தள கட்சியினர் வெளிப்படையாகவே வாய்த்த நிலையில், அதனை கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் நடத்த இந்தியா கூட்டணி காணொளி வாயிலான கூட்டத்தில் கூட நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.     

விலகும் முடிவில்....

அடுத்த மாதத்தின் துவக்கத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பீகார் வரவுள்ள நிலையில், நிதிஷ் குமார் இந்த யாத்திரையில் பங்கேற்கமாட்டார் என்றும் திட்டவட்டமாக அக்கட்சி அறிவித்துள்ளது. இவை கூட்டணியில் இருக்கும் பிரச்சனைகளின் வெளிப்பாடா..? என்று பேசவைத்து வருகின்றது.

nitish-kumar-to-join-hands-with-bjp-again

இந்தியா கூட்டணி உரசல்கள் ஒரு புறம் இருக்க, மாநிலத்திலும் கூட்டணி கட்சியான ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் சில முரண்பாடுகளில் ஜனதா தள கட்சி இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக சந்திக்கும் முடிவில் நிதிஷ் குமார் இருக்கும் நோக்கில், அதனை ராஷ்டிரீய ஜனதா தள கட்சியினர் எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

nitish-kumar-to-join-hands-with-bjp-again

இச்சூழலில் தான், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் பாஜக கூட்டணியுடன் முதல்வராவார் என்ற கருத்துக்கள் அம்மாநிலத்தில் வலுவாக பேசப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, நிதிஷ் குமார் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால், பாஜக பரிசீலிக்கும்'' என்று கூறினார்.

"மோடியை தேர்ந்தெடுங்கள்" - தைப்பூச நாளில் பிரச்சாரத்தை துவங்கிய பாஜக..!

"மோடியை தேர்ந்தெடுங்கள்" - தைப்பூச நாளில் பிரச்சாரத்தை துவங்கிய பாஜக..!

முன்னதாக இந்தியா கூட்டணியில் மேற்குவங்க மாநிலத்தில் மம்தா மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மீ கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், நிதிஷ் குமாரும் விலகி செல்வது,இந்தியா கூட்டணிக்கு பின்னடைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.