"மோடியை தேர்ந்தெடுங்கள்" - தைப்பூச நாளில் பிரச்சாரத்தை துவங்கிய பாஜக..!
வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக கட்சி 400 தொகுதிகளை தாண்டி, வெற்றி பெரும் முனைப்பில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது.
பாஜக நாடாளுமன்ற தேர்தல்
10 ஆண்டுகள் ஆட்ச்சியை நிறைவு செய்யும் பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற மிக தீவிரம் காட்டி வருகின்றது.
எதிர்முனையில் எதிர்கட்சிக்களை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாகியிருக்கும் நிலையில், கூட்டணியில் இன்னும் சில சலசலப்புகள் உள்ளது.
ஆனால், பாஜக கூட்டணி தேர்தலில் பிரதமர் வேட்பாளர் வரை திட்டவட்டமாக அறிவித்து தேர்தல் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது.
ஏப்ரல் 16-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்று பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியிருக்கின்றது.
வீடியோ
மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற வாசகத்துடன் வெளிவந்துள்ள வீடியோவில், கடந்த 10 ஆண்டில் பாஜக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.
இன்று தமிழ்நாட்டில் தைப்பூசம் விழா அனுசரிக்கப்படுமண்ம் சூழலில், பாஜக தனது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
PM @narendramodi launches campaign - “Modi ko chunte hain”. Lok Sabha poll bugle….. pic.twitter.com/6PWAEZCadM
— Nistula Hebbar (@nistula) January 25, 2024