சமாதி நிலையில் மரணமடைந்தாரா நித்யானந்தா ? : சிலை வைத்து நடந்த பூஜையால் பரபரப்பு

Nithyananda
By Irumporai Jun 11, 2022 06:39 AM GMT
Report

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சாமியார் நித்யானந்தா ,தனக்கென கைலாசாவில் தனி நாட்டினை உருவாக்கிய பிறகு பிரபலமானர் , அங்குசென்றவுடன் தன்னை கடவுளின் மறு அவதாரம் எனக் கூறிய நித்யானந்தா பல்வேறு கெட்டப்புகளை போட்டு தினமும் தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

சமாதி நிலைக்கு சென்ற நித்யானந்தா

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது , இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தா உடல் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி உரையாற்றுவேன் என கூறி இருந்த நிலையில்.

தற்போது   கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமாதி நிலையில் மரணமடைந்தாரா நித்யானந்தா ? :  சிலை வைத்து நடந்த பூஜையால் பரபரப்பு | Nithyananda Statue In Kailasa Raises Questions

கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களின் முறைப்படி உயிரோடு இருக்கும் ஒருவருக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் முறை கிடையாது.

ஆனால் நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பில் வெளியிட்டுள்ள தகவலின் படி : கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

சமாதி நிலையில் மரணமடைந்தாரா நித்யானந்தா ? :  சிலை வைத்து நடந்த பூஜையால் பரபரப்பு | Nithyananda Statue In Kailasa Raises Questions

சிலை வழிபாட்டால் பரபரப்பு

சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.இந்த உலகில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இ து இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும்.

அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர். இதற்கிடையே நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்பது குறித்த சரியான விளக்கம் வர வேண்டும் என்பதே நித்யானந்த பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதே சமயம் சிலைவைத்து வழிபட்டதால் ஒரு வேளை ஜீவ சாமதி அடைந்து விட்டார என்ற  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்க பாவடை சன்யாசிகள் அல்ல : கைலாசாவை புனரமைப்போம் நித்யானந்தா சிஷ்யைகள் பரபரப்பு வீடியோ