நித்யானந்தா மரணம் அடைந்துவிட்டாரா? ... அதிர்ச்சியடைய வைத்த போட்டோ

Nithyananda
By Petchi Avudaiappan May 12, 2022 03:29 AM GMT
Report

கைலாச நாட்டின் அதிபர் நித்யானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமான நித்தியானந்தா கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அதில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கைலாசாவுக்கென தனி கரன்சிகளை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

இதனிடையே நித்யானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது. மேலும் அவர் எலும்பும்,தோலுமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளிவந்து அவரது சீடர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.