நாங்க பாவடை சன்யாசிகள் அல்ல : கைலாசாவை புனரமைப்போம் நித்யானந்தா சிஷ்யைகள் பரபரப்பு வீடியோ

Nithyananda
By Irumporai May 27, 2022 05:18 AM GMT
Report

நாங்கள் நித்யானந்தாவை விட்டு செல்ல மாட்டோம் என நித்யான்ந்தா சிஷ்யைகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். தனக்கென தனி நாட்டினை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் நித்யானந்தா கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நிதயானந்தா தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தார், தற்போது நித்யானந்தா உடல் நிலை மிக மோசமாக உள்ளதால் அவரது பிரதான சீடர்கள் அவரை விட்டு விலகி செல்வதகாவும் , நித்யானந்தா மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது நித்யானந்தா இல்லை என்பதால், அவர் சார்பில் அவரது சிஷ்யைகள் சிலர் வீடியோ மூலம் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர். தமிழ் , ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் அந்த வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழில் நித்யானந்தாவின் சிஷ்யை ஆத்மப்ரியானந்தா என்பவர் பேசியுள்ளார். அதில் ,நான் ஒரு முக்கியமான விசயம் சொல்ல விரும்புகிறேன்.

இந்த கைலாசம் என்பது, மொத்த இந்து சனாதனத்தின் கோட்பாடுகள், கலாச்சாரம், இதனுடைய மொத்தத்தின் புனரமைப்பு. பரமசிவனாரே, நேரடியாக திருமேனி தாங்கி வந்து, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவனாக , இந்த திருப்பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்; செய்து முடித்தே தீருவார்.

இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; மாற்றமும் இல்லை. இதில் தொடர்ந்து இந்து சன்யாசியகளாக இருந்து , அவரிடம் நேரடியாக தீட்சை பெற்ற நானும், சக சன்யாசிகளும் சேர்ந்து, இந்த கைலாசத்தை புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம், உறுதுணையாக இருப்போம்.

இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இதில் முக்கியமாக விட்டுட்டு ஓடுறதுக்கு, நாங்க பாவடை சன்யாசிகள் அல்ல... பரமசிவனிடமிருந்தே நேரடியாக தீட்சை பெற்ற சன்யாசிகள்.

அதனால், இந்த கைலாசத்தை யாராலும் அழிக்கவும் முடியாது; கைலாசத்தின் புனரமைப்பை நிறுத்தவும் முடியாது. எங்கள் ஞானசர்குருநாதர் பகவான் நித்யானந்தர் அவர்களோடு இணைந்து இதை செய்வோம். தொடர்ந்து இதை செய்வோம், செய்தே முடிப்போம். இந்த பதிவை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்,என்று பேசியுள்ளார்.