தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார் - முன்னிலையில் யார் இருக்கிறார் தெரியுமா?

Tamil nadu BJP K. Annamalai Vanathi Srinivasan
By Sumathi Jan 11, 2025 10:30 AM GMT
Report

தமிழக பாஜக-வின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

பாஜக கூட்டம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகிறது.

vanathi srinivasan - nainar nagendran - annamalai

அந்த வகையில் தமிழக பாஜக-வின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார்.

இந்தி தேசிய மொழி இல்லை; அஸ்வின் கூறியதுதான் சரி - அண்ணாமலை

இந்தி தேசிய மொழி இல்லை; அஸ்வின் கூறியதுதான் சரி - அண்ணாமலை

அடுத்த தலைவர்? 

மாநில தலைவர் பெயர்ப் பட்டியலில் தற்போதைய தலைவர் அண்ணாமலை, வானதி மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார் - முன்னிலையில் யார் இருக்கிறார் தெரியுமா? | Next Tn Bjp Leader Selection 17Th Jan

இதற்கிடையில், நடிகர் விஜய்யும் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க திமுகவும் களமாடி வருகிறது. அதிமுகவும் மீண்டும் அரியணையில் ஏற தீவிரம் காட்டி வருகிறது.