இந்தி தேசிய மொழி இல்லை; அஸ்வின் கூறியதுதான் சரி - அண்ணாமலை
இந்தி குறித்து அஸ்வின் பேசியதற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
அஸ்வின் பேச்சு
ஆஸ்திரேலிய தொடரில் பாதியில் இருந்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டிருந்தார்.
அப்போது பேசுவதற்கு முன்பு இங்கு எந்த மொழியில் பேசட்டும் என்று கூறினார். அதற்கு தமிழ் என்று சொன்னவுடன் சத்தம் எகிறியது.இதனை தொடர்ந்து அஸ்வின்,
அண்ணாமலை ஆதரவு
ஹிந்தி இங்கு எத்தனை பேர் பேசுவீர்கள் என்று கேட்டவுடன் மயான அமைதியானது. தொடர்ந்து ஹிந்தி வெறும் அலுவல் மொழிதான் அது. நமது தேசிய மொழி கிடையாது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அஸ்வின் கூறியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அஸ்வின் கூறியது சரிதான். நானும் அதையே சொல்கிறேன்.
இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு இணைப்பு மொழி, அது ஒரு வசதிக்கான மொழி. நான் எங்கும் இந்தி தேசிய மொழி என்று சொல்லவில்லை. வேறு யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.