சாட்டையடி அப்போவே அவர் ஞானசூனியத்திற்கு முற்றுப்புள்ளிதான் - அண்ணாமலையை சாடிய அமைச்சர்!
அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சென்னை, கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி திருக்கோயிலில் இருந்து தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசியலை பற்றி எதுவுமே தெரியாது.
சேகர்பாபு விமர்சனம்
அவரை எப்போது தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டாரோ, அப்போதே அவர் அரசியல் ஞானசூனியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது.
பெரியாரை யாரெல்லாம் இழிவு படுத்துகின்றார்களோ அவர்கள் அனைவரும் தமிழக அரசியலுக்கு எடுபடமாட்டார்கள், தமிழகத்தின் விடிவெள்ளி பகுத்தறிவை விதை வைத்து வெளிச்சத்தை உருவாக்கி தந்தவர் தந்தை பெரியார்,
அவரை பற்றி அறியாதவர்கள் கூறும் கருத்தை நாம் ஒரு கருத்தாகவே பொருட்படுத்த தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.