தமிழ்நாட்டில் முகக் கவசம் அணிவது கட்டாயமா? - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
HMPV வைரஸ்
சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகையே முடக்கி போட்டது. தற்போது சீனாவில் உருவாகியுள்ள புதிய வகை வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த HMPV வைரஸ் தொற்றானது இந்தியாவில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொற்று குறித்து தொடர்ந்து கண்காணிப்புகளை மேற்கொள்ளவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மா.சுப்ரமணியம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசி வரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் , இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் முகக் கவசம் மற்றும் தனி மனித இடைவெளி அவசியம். இந்த HMPV வைரஸ் பரவல் குறித்து செய்திகள் வெளியாக தொடங்கியது முதலே தமிழக அரசு இதனை கண்காணித்து வருகிறது.
இது 50 ஆண்டுகளுக்கு முன்னரே உருவான வைரஸ்தான். இது குறித்து அச்சமடைய தேவையில்லை என உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றானது கொரோனா போல வீரியமான வைரஸ் இல்லை. வீரியம் குறைந்த வைரஸ்தான்.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் தனிமையில் இருந்தால் அதுவாகவே சரியாகி விடும்" என தெரிவித்துள்ளார்.