1 வாரத்தில் அடுத்த புயலா? ஆட்டம் காணும் சென்னை - தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

Tamil nadu TN Weather
By Sumathi Dec 07, 2023 04:38 AM GMT
Report

சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

அடுத்த புயல்?

வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

tamil-nadu-weatherman pradeep

அதன்பின், நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்தது. இந்த மோசமான நிலையில் இருந்தே மீளாத நிலையில், இன்னும் 1 வாரத்தில் அடுத்த புயல் வரப்போவதாக செய்திகள் பரவி வருகிறது.

பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை!

பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை!

வெதர்மேன் அப்டேட்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது;

அதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம் அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம்; ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என்றுத் தெரிவித்துள்ளார்.