பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை!

Tamil nadu Chennai TN Weather Weather
By Sumathi Dec 01, 2022 05:38 AM GMT
Report

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில், பருவமழை காரணமாக ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை எச்சரிக்கை குறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் தெரிவித்துள்ளார்.

பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை! | Tamil Nadu Weatherman Pradeep John Rain Alert

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகலில் இருந்து இரவு வரை உள்மாவட்டங்களிலும், இரவு நேரம் தொடங்கி அதிகாலை வரை கடலோரா மாவட்டங்களில் மழை பெய்யும்.

வெதர்மேன் அப்டேட்

குறிப்பாக மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தூத்துக்குடி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கு மக்கள் தயாராக இருக்கும்படி தெரிவித்துள்ளார். மேலும், அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.